2026 ஜனவரி 23, வெள்ளிக்கிழமை

இடிக்க முயற்சி?

Editorial   / 2018 மே 07 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -எஸ். நிதர்ஷன், டீ. விஜித்தா

யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் கட்டப்பட்டு, இடையிலேயே கைவிடப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை இடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

முள்ளிவாய்க்கால் படுகொலையின் ஆவணங்களில் ஒன்றாக, முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை யாழ்.பல்கலைக்கழக வளாகத்தில்  அமைக்கும் பணியை, யாழ். பல்கலை மாணவர் ஒன்றியத்தினர், இரு வாரங்களுக்கு முன்னர் ஆரம்பித்தனர். தூபி அமைக்கும் பணிகள் நிறைவடையும் நிலையிலிருந்த போதும், அப்பணியை உடனடியாக நிறுத்துமாறு,  பல்கலைகழக நிர்வாகத்தினரால் மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

அந்த அறிவுறுத்தலுக்கு அமைய, அப்பணி இடையில் கைவிடப்பட்டது. இந்நிலையில், பூர்த்திசெய்யப்படாமல் உள்ள, நினைவுத் தூபியை இடிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அறியமுடிகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X