2026 மார்ச் 05, வியாழக்கிழமை

‘இதுவரை தகவல் இல்லை’

Yuganthini   / 2017 ஜூலை 03 , மு.ப. 04:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு -03, கொள்ளுப்பிட்டியில் உள்ள அமெரிக்கத் தூதுவராலயத்தின் மீது தாக்குதல் நடத்துவதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு திட்டம் தீட்டியுள்ளதாக ஊடகங்களில் வெளியான அறிக்கை தொடர்பில், எவ்விதமான தகவலும் இதுவரையில் தங்களுக்குக் கிடைக்கவில்லையென இலங்கை பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது.   

அது, அமெரிக்க அரசாங்கத்தால், இந்த நாட்டில் உள்ள அமெரிக்கத் தூதுவராலயத்துக்கு விடுக்கப்பட்ட அறிவிப்பாக இருக்கலாம் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். 

எனினும், அந்த அறிக்கை தொடர்பில் காரணங்களைத் தேடியறிவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.   
ஊடங்களில் வெளியான அந்தச் செய்தி தொடர்பில், கூடுதலான அவதானம் செலுத்தி, அவ்வாறான சம்பவமொன்று இடம்பெறாத வகையில் பார்த்துக்கொள்வதற்கு, உடனடி நடவடிக்கைகளை எடுக்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .