2026 ஜனவரி 13, செவ்வாய்க்கிழமை

இதை சொன்னால்தான் அமெரிக்காவுக்கு செல்லாமாம்

George   / 2017 ஜூன் 02 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்கா வீசாவை எதிர்பார்க்கும் வௌிநாட்டவர்களுக்கு, அவர்கள் கடந்த 5 வருடங்களில் பயன்படுத்திய சமூகவலைத்தள பெயரை வௌியிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தின் கீழ், இது கட்டாயமாக்கப்படும். இது குறித்த சட்டத்துக்கு,  கடந்த 23ஆம் திகதி ​​அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம் தலைமையிலான அரசாங்கத்ததால் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

புதிய சட்டத்துக்கு அமைய, வீசாவுக்கு விண்ணப்பிக்கும் நபர், கடந்த 5 வருட காலத்தில் பயன்படுத்திய  சமூக ஊடகங்கள் தொடர்பான தகவல்,  மின்னஞ்சல் முகவரி, அலைபேசி இலக்கங்கள் தொடர்பில் விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

அத்துடன், கடந்த 15 வருடங்களாக அவர் வசித்த முகவரி, தொழில், பயண விவரங்கள் உள்ளிட்டவற்றையும் தெரிவிக்க வேண்டும்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு இவ்வாறான சட்டம் நடைமுறைக்கு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .