Editorial / 2020 ஓகஸ்ட் 08 , பி.ப. 04:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(வீ.சுகிர்தகுமார்)
தன்னுடைய அலுவலகம் உள்ளிட்ட பிரதேசம் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டதன் மூலம் நீதிக்கான கேள்வி எழுப்பப்பட்டுள்ளது என அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்.
அத்தோடு, தனக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கும் வாக்களித்த அம்பாறை மாவட்ட மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார்.
அக்கரைப்பற்றில் உள்ள அவரது இல்லத்தில் இன்று (08) இடம்பெற்ற ஊடவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு மேலும் கருத்துரைத்த அவர்,
அம்பாறையில் வாழும் மக்கள் நிம்மதியாக வாழவேண்டும் எனும் அடிப்படையிலேதான் தேர்தலில் போட்டியிட்டதாகவும்,
இன்று எனது அலுவலகம் உள்ளிட்ட பிரதேசம் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டதுடன் என்றார்.
இனிவரும் நாள்களிலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடருமோ எனும் அச்சம் மக்கள் மத்தியிலே உருவாகியுள்ளதாக தெரிவித்த அவர், அந்த இச்செயற்பாடுகள் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் கோரினார்.
33 minute ago
38 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
38 minute ago
4 hours ago