2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

இரண்டு நாள்களில் இறுதி தீர்மானம்

R.Maheshwary   / 2020 நவம்பர் 30 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

அடுத்த வருடம் ஜனவரி மாதம், கல்வி பொதுதராதர சாதாரண தர பரீட்சையை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பில், எதிர்வரும் 2 நாள்களில் அறிவிக்கவுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலையில், 50 சதவீதமான பாடசாலைகளில் சாதாரணத் தர கற்கை நடவடிக்கைகள் இடம்பெறாமையால், குறிப்பிட்ட தினத்தில் பரீட்சையை நடத்துவது குறித்து சிக்கல் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய சகலத் துறையினருடனும் கலந்துரையாடி, எதிர்வரும் 2 நாள்களில் பரீட்சை தொடர்பான இறுதி முடிவை அறிவிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

சில வேளைகளில் குறிப்பிட்ட தினத்தில் பரீட்சையை நடத்த முடியாது போனால்,  பரீட்சையை மீள நடத்தும் திகதியை, குறைந்தது 6 வாரங்களுக்கு முன்னர் மாணவர்களுக்கு அறிவிப்பதாகவும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .