2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

இலங்கையர்கள் 18 பேரை நாடு கடத்தியது அமெரிக்கா

Editorial   / 2020 செப்டெம்பர் 19 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

இதுவரையில் வெளிநாடுகளில் பணிபுரிந்து வந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக நாடு திரும்ப முடியாமல் சிறைப்பட்டு கிடந்த 30 ஆயிரத்துக்கும் அதிமானவர்கள் நாட்டுக்குள் அழைத்துவரப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்துள்ள இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரால் ஷ​வேந்திர சில்வா, அவர்கள் சகலரையும் ஹோட்டல்களிர் தனிமைப்படுத்தலுக்கு ஆளாக்கியுள்ளதாகவும் தெரிவித்தார். 

அத்தோடு, அமெரிக்காவில் வீசா காலம் நிறைவு பெற்ற பின்னரும் தங்கியிருந்த இலங்கையர் 18 பேர் மீள அனுப்பட்டுள்ள நிலையில் அவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதன்படி, மேற்படி 18 பேரும் பிசிஆர் பரி​சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்றும், அவர்களுக்கான 21 நாள் தனிமைப்படுத்தல் காலம் நிறைவுற்ற பின்னர் அவர்களிடத்தில், குற்றப்புலனாய்வு பிரிவினர் வாக்குமூலம் பெற்றுக்கொள்ள உள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X