2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

'உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் இல்லை'

Editorial   / 2020 ஜனவரி 28 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீதிமன்ற வழக்குகள் தொடர்பில் தனக்கு உத்தரவு பிறப்பிக்க அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு சட்ட பூர்வமாக எந்தவொரு அதிகாரமும் இல்லையென சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.

குறித்த ஆணைக்குழுவுக்கு எழுத்து மூலமாக இன்று (28) அவர் இதனை அறிவித்துள்ளார்.

ஆணைக்குழு விசாரணைகள் நிறைவடையும் வரை அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் டி.கே.பி. தசநாயக்க ஆகியோருக்கு எதிரான வழக்கு விசாரணைகளை ஒத்திவைக்குமாறு விடுக்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு பதிலளிக்கும் வகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

அந்த ஆணைக்குழு சட்டமா அதிபருக்கு நேற்று (27) இது தொடர்பான அறிவித்தலை முன்வைத்திருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .