2021 மார்ச் 08, திங்கட்கிழமை

ஊழியர்களின்றி இயங்கும் கொம்பனித் தெரு ரயில்!

A.K.M. Ramzy   / 2020 டிசெம்பர் 05 , மு.ப. 06:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு, கொம்பனித் தெரு ரயில் நிலைய ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலில் அனுப்பப்பட்டிருப்பதால், கொம்பனித் தெரு ரயில் நிலையம், ஊழியர்கள் எவரும் இல்லாமல் இயங்குகின்றது.

கொம்பனித் தெரு ரயில் நிலைய ஸ்ரேஷன் மாஸ்ட்டர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டு ள்ளதையடுத்தே ஊழியர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள்.

ரயில் பயணிகள், கொம்பனி வீதி ரயில் நிலையத்திலிருந்து பயணத்தை ஆரம்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அங்கு அவர்களிடம் டிக்கட் கேட்கப்படாது.

கொம்பனித் தெரு ரயில் நிலையத்திலிருந்து பயணம் செய்பவர்களிடம் டிக்கட் கேட்க வேண்டாம் என ஏனைய ரயில் நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டு ள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .