R.Maheshwary / 2020 நவம்பர் 29 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
பயணக்கட்டுபாடு விதிக்கப்பட்டுள்ள அல்லது தனிமைபடுத்தப்பட்டுள்ள பிரதேசங்களில் திறக்கப்பட்டுள்ள தனியார் மற்றும் அரச நிறுவனங்களில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக இலங்கை பொதுசுகாதார பரிசோதகர் சங்கம் தெரிவித்துள்ளது.
இதனால் குறித்த நிறுவனங்களின் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுமாயின், அந்த பிரதேசங்களில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் நிலை ஏற்படுமென, இச்சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண தெரிவித்துள்ளார்.
தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களிலுள்ள நிறுவனங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதால் சில நிறுவனங்களில் அதிக தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
.கொரோனா அவதானம் அதிகமுள்ள இடங்களிலிருந்து குறித்த நிறுவனங்களுக்கு பணியாளர்கள் வந்து செல்வதாகவும் குறிப்பாக கொழும்பு மாநகர சபைக்குடபட்ட துறைமுகத்தை அண்மித்த பகுதிகளில் கட்டுபாடின்றி தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனவே திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட்ட நிறுவனங்களில் சுகாதார வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா தொடர்பில் தீவிர அவதானம் செலுத்துவது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
21 minute ago
47 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
47 minute ago
58 minute ago