2026 ஜனவரி 02, வெள்ளிக்கிழமை

ஆங்கிலப் பாடப் புத்தகம் தொடர்பில் அதிரடி தீர்மானம்

Freelancer   / 2026 ஜனவரி 02 , பி.ப. 07:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய 6ஆம் தர ஆங்கிலப் பாடப் புத்தகம் தொடர்பில் கல்விப் பொதுத்தராதர நிபுணர்களுடன் தீவிர ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கல்வி மற்றும் உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

சர்ச்சைக்குரிய பக்கத்தை நீக்கிய பின்னர், அவ்விடத்தில் புதிய திருத்தப்பட்ட பக்கத்தை அச்சிட்டு இணைப்பதா அல்லது மாற்று ஏற்பாடுகளைச் செய்வதா என்பது குறித்து மூன்று திட்டங்கள் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்தார்.

மேலும், பாடப்புத்தகத்தின் உள்ளடக்கத்திற்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலும், அரசாங்கத்திற்கு ஏற்படும் மேலதிக செலவுகளைக் குறைக்கும் வகையிலும் இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படவுள்ளது.

தரம் 6 மாணவர்களுக்காக சுமார் 350,000 புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளன. இதற்காக 6 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. எனவே, முழுப் புத்தகத்தையும் மீண்டும் அச்சிடப் போவதில்லை எனவும், பிரச்சினைக்குரிய பக்கத்தை மாத்திரம் அகற்றிவிட்டு நிபுணர்களின் ஆலோசனைப்படி குறித்த விடயத்திற்கு தீர்வு காணப்படும் எனவும் கல்வியமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X