2026 ஜனவரி 02, வெள்ளிக்கிழமை

80 வீதமானோருக்கு இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன

Freelancer   / 2026 ஜனவரி 02 , பி.ப. 07:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட அனர்த்தங்களால் உயிரிழந்த 519 நபர்களுக்கான இறப்புச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், 92 நபர்களுக்கான பதிவுச் சான்றிதழ்கள் இன்னும் வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளன.

பேரிடர் மேலாண்மை மையத்தின் தரவுகளின் அடிப்படையில் இதுவரை 611 உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் சஷி தேவி ஜலதீபன் தெரிவித்தார்.

நிலச்சரிவுகள் மற்றும் மண் மேடுகள் சரிந்து விழுந்ததால் தற்போது காணாமல் போன 164 பேரில் 92 நபர்களின் பெயர்கள் அவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த பிரதேச செயலகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. R


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X