2026 ஜனவரி 18, ஞாயிற்றுக்கிழமை

‘எனக்கு ஒன்றும் தெரியாது’

Editorial   / 2017 ஜூலை 04 , மு.ப. 03:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கொழும்பு-03 கொள்ளுப்பிட்டியில் உள்ள, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராலயத்தின் மீது, ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினரால் தற்கொலைத்தாக்குதல் மேற்கொள்ளப்படவுள்ளதாக வெளியாகியுள்ள செய்தி தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது என்று, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

  அமெரிக்காவின் புலனாய்வு பிரிவினரே, இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அது தொடர்பில் தான் கேள்விபடவில்லை என்றும், சிங்கள ஊடகமொன்றுக்கு அவர் தெரிவித்துள்ளார்.  

“இந்த செய்தி, சமூக வலைத்தளங்களில் மட்டுமன்றி, தேசிய பத்திரிகைகளிலும் தலைப்புச் செய்திகளாக வெளியாகியுள்ளன. எனினும், வெளிநாட்டுக்கு நான் வந்துள்ளேன். அந்தசெய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் என்னால் எதனையும் கூறமுடியாது” என்றும் அவர் குறிப்பிட்டார்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X