2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

‘எரிக்க எடுத்த முடிவு மாறாது’

Editorial   / 2021 ஜனவரி 27 , மு.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகேஸ்வரி விஜயனந்தன்

கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்பவர்களின் சடலங்களைத் தகனம் செய்வது தொடர்பிலான தற்போதைய நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமுமில்லை எனத் தெரிவித்த அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல, இலங்கை சுகாதாரப் பிரிவினரின் பரிந்துரைகளையே அரசாங்கம் கடைப்பிடிக்கும் என்றார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (26) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களைத் தகனம் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டுமென, ஐ.நா சபையின் நிபுணர் குழு இலங்கையை வலியுறுத்தியுள்ளமை தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அமைச்சர்,

இந்த விடயம் தொடர்பில் சுகாதாரப் பிரிவினர் வழங்கும் பரிந்துரைகளைக் கடைப்பிடிக்காது விட்டால், நாட்டில் ஏற்படும் பாதிப்புகளுக்கான பொறுப்பை அரசாங்கமே ஏற்கும் நிலை உருவாகும் எனத் தெரிவித்த அவர்,  சாதாரண நபர்கள் என்றவகையில் எம்மால் அந்தப் பொறுப்பை ஏற்கமுடியாது.  வைத்தியத்துறை தொடர்பில் அதிகமான தெளிவு எமக்கில்லை. எனவே, சுகாதார அதிகாரிகளின் தீர்மானங்களுக்கு அப்பால் சென்று, எம்மால் தன்னிச்சையான முடிவுகளை எடுக்க முடியாது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .