R.Maheshwary / 2021 ஏப்ரல் 07 , மு.ப. 02:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
அரசாங்கத்துக்குச் சொந்தமான பெருந்தோட்டக் கம்பனிகளிலிருந்து, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமெனத் தெரிவித்த பெருந்தோட்டத் துறை அமைச்சர் ரமேஷ் பத்திரண, இதுவொரு பாரிய வெற்றியெனவும் தெரிவித்தார்.
ஆயிரம் ரூபாய் சம்பளத்தை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்காத கம்பனிகளை அரசாங்கம் சுவீகரிப்பதற்கான எந்தவிதமான யோசனைகளும் இல்லை எனவும் அனைத்துப் பெருந்தோட்ட நிறுவனங்களும், தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்குமெனத் தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
சபாநாயகர் தலைமையில் நேற்று (06) கூடிய பாராளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு, வாய்மூல விடைக்கான வினாக்களுக்குப் பதிலளிக்கும் போதே, அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய அவர், இரத்தினபுரியில் காணிகளற்ற தோட்டக் குடும்பங்களுக்கு காணிகளை வழங்க, அரசாங்கத்தால் நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இரத்தினபுரி மாவட்டத் தோட்டங்களில், 21 ஆயிரத்து 63 குடும்பங்கள் வசிப்பதாகவும், இவர்களுக்கு வீடுகளை அமைப்பதற்கான காணிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதன்படி, 2 ஆயிரத்து 414 குடும்பங்களுக்கு 177.9 ஏக்கர் காணிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்தார்.
இரத்தினபுரியில் உள்ள காணிகளற்ற தோட்டக் குடும்பங்களுக்கான காணிகளை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென, அவர் மேலும் தெரிவித்தார்.
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026