Editorial / 2018 ஜனவரி 22 , பி.ப. 10:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுராங்கனி புகழ், பொப்பிசைச் சக்கரவர்த்தி ஏ.இ மனோகரன் சென்னையிலுள்ள திருவான்மையூர், கந்தன்சாவடியில் இன்றிரவு 7.20 மணியளவில் இயற்கையெய்தினார்.
இலங்கையில் பொப்பிசைத்துறையில் பிரபல்யமான பாடகராகத் திகழ்ந்த இவர், இலங்கையின் தமிழ் பொப்பிசையை உலக அளவில் எடுத்துச் சென்ற பெருமைக்குரியவராகத் திகழ்ந்தார். இவர் சுராங்கனி சுராங்கனி மாலு கெனாவா என்ற பாடலை ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், சிங்களம், மலே, போர்ச்சுக்கீஸ் உள்ளிட்ட 7 மொழிகளில் பாடியுள்ளார்.
பொப்பிசைத்துறை மட்டுமல்லாது சினிமாத்துறையிலும் கால்பதித்திருந்தார். அன்னாரது இறுதிக்கிரியைகள் நாளைமறுதினம் புதன்கிழமை சென்னையில் நடைபெறும்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .