Editorial / 2019 ஒக்டோபர் 24 , பி.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனாதிபதித் தேர்தலில் எந்த வேட்பாளருக்கு ஆதரவளிப்பது தொடர்பில் தீர்க்கமான முடிவொன்றை எடுப்பது குறித்து கலந்துரையாடுவதற்காக ஐந்து தமிழ் கட்சிகளும் இன்று (24) கொழும்பில் கூடவிருந்த நிலையில், வட மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரஷ் பிரேமசந்திரன் ஆகியோர் கலந்துகொள்வதற்கு மறுப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நேற்று (23) நாடாளுமன்றக் கட்டத்தொகுதியில் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற போது, இன்று கூடுவதாக முடிவு எடுக்கப்பட்டது.
எனினும், பல்கலைகழக மாணவர்களின் ஏற்பாட்டில் ஒன்றிணைந்த ஐந்து தமிழ் கட்சிகளும் தீர்மானமொன்றுக்கு வந்துள்ள நிலையில், மீண்டும் ஒரு கலந்துரையாடல் மற்றும் புதிய தீர்மானங்கள் தேவையில்லை என்பதால், இன்று (24) நடைபெறும் கூட்டத்தை புறக்கணிக்க தீர்மானித்ததாக, சி.வி.விக்னேஷ்வரன் மற்றும் சுரோஷ் பிரேமசந்திரன் ஆகியோர் தமிழ்மிரருக்கு தெரிவித்தனர்.
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago