2020 ஒக்டோபர் 22, வியாழக்கிழமை

ஐ.தே.க உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்க தவறியமைக்கு பாலித கண்டனம்

Super User   / 2010 மே 16 , மு.ப. 03:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார கண்டனம் தெரிவித்துள்ளார்.

சிலாபத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி  இடம்பெற்றிருந்த  கூட்டத்தின்போது, பாலித ரங்கே பண்டார தாக்கப்பட்டிருந்த நிலையில், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றிருந்தார்.

இந்நிலையில், பாலித ரங்கே பண்டார தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான  சாந்த அபயசேகர கைதுசெய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

மேற்படி உறுப்பினருக்கு எதிராக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க சரியான முறையில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தவறியிருப்பதாகவும் டெயிலிமிரர் இணையதளத்திற்கு பாலித ரங்கே பண்டார கூறினார்.

திஸ்ஸ அத்தநாயக்க குறித்த உறுப்பினருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கத் தவறும் பட்சத்தில்,  தனது அடுத்தகட்ட நடவடிக்கையாக எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் ஊடகங்களை நாடவிருப்பதாகவும் பாலித ரங்கே பண்டார குறிப்பிட்டார். 
   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X