Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை
Gavitha / 2021 ஜனவரி 19 , பி.ப. 12:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உப தலைவர் ரவி கருணாநாயக்க, தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க, முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க ஆகியோர், கட்சியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளனர் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
2021ஆம் ஆண்டு ஆரம்பத்தில், கட்சித் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ரணில் விக்ரமசிங்க அறிவித்திருந்த போதும் அவர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கவில்லை.
அண்மையில் நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் மீண்டும் கட்சியின் தலைவராக, ரணில் விக்ரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
மேலும் கட்சியில் புதிய பதவிகள் வழங்கும் விடயத்தில் தான்தோன்றித்தனமாக முடிவு எடுத்துள்ளதாக, கட்சியிலுள்ள சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் ரவி கருணாநாயக்க, நவீன் திஸாநாயக்க, அர்ஜுன ரணதுங்க ஆகியோர், ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தெரியவருகிறது.
விரைவில் இவர்கள் சஜித் பிரேமதாஸவின் ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இணைந்து கொள்வர் என்றும் கூறப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
33 minute ago
33 minute ago
36 minute ago