2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

ஒன்லைன் கற்கைக்காக நீர்தாங்கிமேல் ஏறும் மாணவர்கள்

S. Shivany   / 2020 நவம்பர் 29 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹிரான் பிரியங்கர

கொரோனா வைரஸ் பரவல் நிலையையடுத்து, மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் ஒன்லைன் முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

மாணவர்கள் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் ஒன்லைன் கல்வியை கற்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், இணைய வழி கற்கையில் நகவத்தேகம மாணவர்கள் எதிர்நோக்கும் சவால் இவ்வாறு அமைந்துள்ளது.

அதாவது, ஒன்லைன் கற்கைக்கு மிக அவசியமானது நெட்வேர்க். நெட்வேர்க் இல்லாமல் ஒன்லைன் கல்வியை தொடர முடியாது. இவ்வாறிருக்க நவத்தேகம- மொரகஹாவெவ கிராமத்து மாணவர்கள் தினமும் 60 அடி உயரமான நீர்தாங்கி மேல் ஏறி நின்றே ஒன்லைன் கல்வியை கற்று வருகின்றனர்.

ஏனெனில், நீர்தாங்கி மேல் ஏறினால் மாத்திரமே அலைபேசிகளுக்கு நெட்வேர்க் கிடைக்கிறது என அக்கிராமத்து மாணவர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு எத்தனை மாணவர்கள் ஒன்லைன் கல்வியை கற்பதில் சிரமங்களை எதிர்கொள்வார்கள்?/???

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .