2021 ஏப்ரல் 22, வியாழக்கிழமை

குடிநீர் போத்தல் வர்த்தகர்களின் கவனத்துக்கு

Niroshini   / 2021 பெப்ரவரி 26 , பி.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடிநீர் போத்தல் வியாபார நடவடிக்கையில் ஈடுபடும் வர்த்தகர்கள், அவர்களின் வருமானத்தை அடிப்படையாக கொண்டு, ஒரு லீட்டர் போத்தலுக்கு பொருத்தமான கட்டணத்தை, அரசாங்கத்துக்கு அறவிட வேண்டும் என, நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார  தெரிவித்தார்.

கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்தே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், குடிநீர் போத்தல்களை விநியோகிக்கும் வர்த்தகர்கள், பாரியளவில் இலாபங்களைப் பெறுவதாகவும், அதன் ஊடாக அரசாங்கத்திற்கு மிகக் குறைந்த அளவு நிதியே கிடைப்பதாகவும் கூறினார்.

குடிநீர் போத்தல் வர்த்த நடவடிக்கை, தற்போது பாரியளவு வர்த்தகமாக மாறியுள்ளதாகத் தெரிவிஉத்த அவர், அது தற்போது ஏற்றுமதி நடவடிக்கை வரை வளர்ச்சியடைந்துள்ளதாகவும் கூறினார்.

"எனவே, இந்தத் துறைக்காக பயன்படுத்தப்படும் நிலத்தடி நீரின் அளவையும்,  நிலத்தடி நீர் வளங்களின் தாக்கத்தையும் கண்காணிக்க வேண்டும்.

"அத்துடன், இந்தத் துறையில் ஈடுபடும் வர்த்தகர்கள், ஒரு லீட்டர் குடிநீர் போத்தலின் ஊடாக, பாரிய வருமானத்தைப் பெறுகின்ற போதிலும், அரசாங்கத்துக்கு ஐந்து சதம் ரூபாயே செலுத்துகின்றனர்.

"இந்த நிலையில், அவர்களின் வருமானத்தை அடிப்படையாக கொண்டு, ஒரு லீட்டர் போத்தலுக்கு பொருத்தமான கட்டணத்தை அறவிட வேண்டும்" என, வாசுதேவ நாணயக்கார மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X