2021 ஜனவரி 17, ஞாயிற்றுக்கிழமை

கடல்சார் முத்தரப்பு பாதுகாப்பு மாநாடு இன்று

J.A. George   / 2020 நவம்பர் 27 , மு.ப. 09:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்தியா மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கு இடையிலான முத்தரப்பு கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பு மாநாடு இன்று ஆரம்பமாகவுள்ளது. நாளை (28) நிறைவடையவுள்ளது.

இந்த மாநாடு நான்காவது முறையாக இடம்பெறவுள்ளதுடன், கடந்த 2014 ஆம் ஆண்டு புதுடில்லியில்  இறுதியாக மாநாடு இடம்பெற்ற நிலையில் 06 வருடங்களுக்கு பிறகு தற்போது இலங்கையில் இடம்பெறவுள்ளது.

பங்களாதேஷ், சிசெல்ஸ் மற்றும் மொரிஷியஸ் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் கண்காணிப்பு மட்டத்தில் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்திய சமுத்திரத்தின் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பினை விரிவுபடுத்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் இந்த மாநாட்டின் கவனம் செலுத்தப்படவுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .