2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

கந்தப்பளையில் பதற்றம்; பொலிஸார் குவிப்பு

Nirosh   / 2021 ஜனவரி 17 , பி.ப. 08:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆ.ரமேஸ்)

கந்தப்பளை பொலிஸ்  பிரிவுக்குட்பட்ட பார்க் தோட்டத்தில்  பதற்றம்  ஏற்பட்டுள்ளது.

இராஜாங்க  அமைச்சர் ஜீவன் தொண்டமான், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதுபாண்டி ராமேஸ்வரன் ஆகியோர் மீது பார்க் தோட்ட அதிகாரி தகாத வார்த்தைகளைப் பிரயோகித்தமையினாலேயே அங்குப் பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.

பார்க் தோட்டத்தில் வீடமைப்பு திட்டத்திற்காக இடத்தினை பெற்றுக்கொள்வது தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை காரணமாக, நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதுபாண்டி ராமேஸ்வரனுக்கும் தோட்ட அதிகாரிக்குமிடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது, மருதுபாண்டி ராமேஸ்வரன் மீது தோட்ட அதிகாரி தகாத வார்த்தை பிரயோகங்களை பிரயோகித்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதனால் கோபமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் அடங்கிய குழுவினர் பார்க் தோட்ட அதிகாரியின் விடுதிக்கு சென்றதால் அங்குப் பதற்ற நிலை உருவாகியுள்ளது.

இதனால் நிலைமையை கட்டுப்படுத்த கந்தப்பளை, நுவரெலியா பொலிசார் அங்குக்  குவிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .