2026 ஜனவரி 17, சனிக்கிழமை

“கனடா ​வேலை வாய்ப்பை தருவதாக கூறி நிதி மோசடி”

Yuganthini   / 2017 ஜூலை 06 , பி.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடாவில் வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி, சிலர் நிதி மோசடியில் ஈடுபடுகின்றனர். இவ்விடயத்தில் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என, வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்தார்.

“இலங்கை மற்றும் கனேடிய அரசாங்கங்களுக்கு இடையில், வேலைவாய்ப்புத் தொடர்பில் எந்தவொரு ஒப்பந்தங்களும் இல்லை.

“அண்மையில் கனடாவில் வேலைப் பெற்றுத்தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த பெண் ஒருவரை, வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசாரணைப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்தச் சந்தேகநபர், தலா 4 இலட்சம் ரூபாயை வீதம் பெற்றுள்ளார். ஆதலால், மக்கள் இத்தகைய மோசடிகளில் சிக்கிக்கொள்ள வேண்டாம் என அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X