Editorial / 2017 டிசெம்பர் 04 , மு.ப. 08:37 - 0 - {{hitsCtrl.values.hits}}
‘எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சுயேட்சையாகவே எதிர்கொள்ளவுள்ளோம்’ என, கருணா அம்மான் என்று அழைக்கப்படும்இ முன்னாள் பிரதியமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து, சிறுபான்மைக் கட்சிகள் சில போட்டியிடவுள்ளதாக வெளியான செய்தி தொடர்பில் கேட்டபோதே, தமிழ்மிரருக்கு இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
‘தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி கட்சி இன்னமும் பதிவு செய்யப்படாமையால், இம்முறை தேர்தலைச் சுயேட்சையாகக் களமிறங்கியே சந்திக்கவுள்ளோம். எந்தவொரு பெருங் கட்சிகளுடனும் சேர்ந்து செயற்படும் முடிவை நாங்கள் எடுக்கவில்லை.
‘இது நாங்கள் சந்திக்கும் கன்னித் தேர்தல். ஆகையால், எமது பலத்தை நிரூபிக்க நாங்கள் முழு அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். மக்கள் நலனுக்காகக் குரல்கொடுக்கும் எங்களை நிச்சயமாக மக்கள் ஆதரிப்பர்’ என்றார்.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago