2020 டிசெம்பர் 06, ஞாயிற்றுக்கிழமை

கொரோனா உப கொத்தணிகள் குறித்து எச்சரிக்கை

Gavitha   / 2020 ஒக்டோபர் 29 , பி.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

பேலியகொட கொரோனா கொத்தணியை விடப் பெரிய கொத்தணியொன்று உருவானால், அதை இந்நாட்டுச் சுகாதாரத் துறையினரால் கட்டுப்படுத்துவது கடினமாகிவிடும் என்று, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 

அவ்வாறான நிலை​மையொன்று ஏற்படுமாயின், நாடு பாரிய பிரச்சினைகளை எதிர்கொள்ளும் என்று, அச்சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் டொக்டர் ஹரித்த அளுத்கே தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் தொடர்ந்து தெரிவித்துள்ள அவர், நாட்டுக்குள் இப்போதைக்கு, உப கொத்தணிகள் பலவும் உருவாகியுள்ளன என்றும் இதன் ஆரம்பப்புள்ளி, மினுவங்கொட கொத்தணியென்றும் தெரிவித்துள்ளார். 

அதன்பின்னர், கொழும்பு கப்பல்தளம், மத்துகம மற்றும் அகலவத்த, குளியாபிட்டிய, கஹாதுடுவ போன்ற பகுதிகளிலிருந்து, உப கொத்தணிகள் உருவாகியுள்ளன என்றும் தெரிவித்துள்ள அவர், இவை எல்லாவற்றையும் விட, பேலியகொட கொத்தணி​யைப் போன்று பெரிய கொத்தணியொன்று மீண்டும் உருவாகுமாயின், அதிலிருந்து நாடு மீள்வது மிகக் கடினமாகிவிடும் என்றுரைத்துள்ளார். 

அதனால், மீண்டும் இவ்வாறான உப கொத்தணிகள் உருவாகுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை உடன் முன்னெடுக்க வேண்டுமென்று, டொக்டர் ஹரித்த வலியுறுத்தியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .