J.A. George / 2021 ஜனவரி 18 , பி.ப. 09:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 270 ஆக உயர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு 03 பகுதியை சேர்ந்த 63 வயதுடைய பெண், கொழும்பு 15 பகுதியை சேர்ந்த 80 வயதுடைய ஆண், , முகத்துவாரம் பகுதியை சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
அத்துடன், களுத்துறை தெற்கு பகுதியை சேர்ந்த 65 வயதுடைய ஆண், தெஹிவளை பகுதியை சேர்ந்த 63 வயதுடைய ஆண் மற்றும் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஆகியோரோம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
16 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
20 minute ago