Editorial / 2017 ஜூன் 08 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
முன்னாள் பிரதியமைச்சரான கருணா என்றழைக்கப்படும், விநாயகமூர்த்தி முரளிதரளிதரனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குக்கு, முறைப்பாட்டை தாக்கல் செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான், சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு, நேற்று (07) கட்டளையிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினருக்கான வரப்பிரசாதத்தை பயன்படுத்தி, 90 மில்லியன் ரூபாய் பெறுமதியான, பதிவு செய்யப்படாத அதுவும் துப்பாக்கி ரவைகள் துளைக்கமுடியாத, ஜீப்பை மீண்டும் கையளிக்காமல், தவறான முறையில் பயன்படுத்தினார் என்றக் குற்றச்சாட்டில் அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணையை நிறைவுக்கு கொண்டுவந்து, அவை தொடர்பிலான சட்டமா அதிபரின் ஆலோசனைக்கான மேற்கோள்களை இட்டு, கோவை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் எனினும், சட்டமா அதிபர் திணைக்களத்திடமிருந்து இதுவரையிலும் எவ்விதமான ஆலோசனைகளும் கிடைக்கவில்லை என்று, இரகசிய பொலிஸார், நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
அவற்றை கவனத்தில் கொண்டே, நீதவான் மேற்கண்டவாறு கட்டளையை பிறப்பித்தார்.
7 hours ago
05 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
05 Mar 2026