Editorial / 2019 டிசெம்பர் 14 , பி.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(பாறுக் ஷிஹான்)
கல்முனை பஸ் தரிப்பு நிலையத்தை விரைவாக புனரமைப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படுமென தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்துக்கு கருணா வெள்ளிக்கிழமை(13) இரவு அப்பகுதிக்கு சென்று நிலமைகளை ஆராய்ந்தார்.
இதுத் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள கருணா அம்மான், “அம்பாறை மாவட்டத்தில் முக்கிய வர்த்தக கேந்திர நிலையமாகக் காணப்படுகின்ற கல்முனை மாநகரத்தில் அமைந்துள்ள இந்த பஸ் தரிப்பு நிலையம் இவ்வாறு குறைகளுடன் நீண்ட காலமாக புனரமைப்புச் செய்யப்படாமல் இருப்பது கவலைக்குரியது.
இங்கு பயணிகளும் வாகன சாரதிகளும் பல்வேறு அசௌகரீகங்களை எதிர்நோக்கி வருகின்றதை நேரடியாக நான் பார்த்தேன்.இந்த பஸ் தரிப்பு நிலையம் குன்றும் குழியுமாகக் காணப்படுவதை ஏற்க முடியாதுள்ளது. எதிர்வரும் சில தினங்களில் இந்த பஸ் தரிப்பிடத்திற்கு 10 பில்லியன் நிதியுதவியை முதற்கட்டமாக வழங்க நடவடிக்கை மேற்கொள்ள உள்ளேன்.
நீண்ட தூரம் பிரயாணம் செய்யவரும் பயணிகள் தங்குவதற்கும் குறிப்பாக அமர்ந்து கொள்வதற்கான வசதிகளும் என்னால் உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” எனவும் தெரிவித்துள்ளார்.
3 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
14 Dec 2025
14 Dec 2025
14 Dec 2025