2020 டிசெம்பர் 01, செவ்வாய்க்கிழமை

கல்வி நடவடிக்கை நாளை ஆரம்பம்

S. Shivany   / 2020 நவம்பர் 22 , மு.ப. 07:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் மூன்றாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகள் நாளை(23) மீள ஆரம்பமாகவுள்ளன.

மேல் மாகாணத்தை தவிர ஏனைய மாகாண பாடசாலைகளே கல்வி நடவடிக்கைகளுக்காக நாளை திறக்கப்படவுள்ளன.

மேல் மாகாணத்தில் கொரோனா அச்சுறுத்தல் தொடர்ந்து நிலவுவதால், பாடசாலை கல்வி நடவடிக்கைகள் மீள் அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன.

ஏனைய மாகாணங்களில் கல்வி நடவடிக்கைகள் நாளை மீள ஆரம்பமாகவுள்ளதால், பாடசாலைகள் கிருமி தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் பாடசாலைகளில் சுகாதார வழிமுறைகள் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென, கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதற்கு பெற்றோர் வீணாக அச்சமடையத் தேவையில்லையென, கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கமையவே, முன்னர் திட்டமிட்டவாறு பாடசாலை கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .