2025 டிசெம்பர் 14, ஞாயிற்றுக்கிழமை

கலைஞரின் இறுதிக் கிரியையில் பிரதமர், கரு சார்பில் மனோவும் செல்வமும் பங்கேற்பு

Editorial   / 2018 ஓகஸ்ட் 08 , மு.ப. 10:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் முதுபெரும் அரசியல்வாதியுமான மறைந்த மு.கருணாநிதியின் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதற்காக, இலங்கைப் பிரதமர் சார்பில் அமைச்சர் மனோ கணேசனும் சபாநாயகர் சார்பில் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளரும் எம்.பியுமான செல்வம் அடைக்கலநாதனும், இன்று (08) காலை, சென்னை நோக்கிப் பயணித்துள்ளனர்.

இவர்களுடன், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், நாடாளுமன்ற உறுப்பினர்களாக வடிவேல் சுரேஷ் மற்றும் எம்.திலகர் ஆகியோரும் பயணித்துள்ளனரெனத் தெரிவிக்கப்படுகின்றது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X