2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

மாணவர்களுக்கிடையில் மோதல்; களனி பல்கலை மறு அறிவித்தல் வரை மூடல்

Super User   / 2010 மே 19 , பி.ப. 12:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரு மாணவர் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றை அடுத்து களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் தவிர்ந்த அனைத்து பீடங்களும் மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டுள்ளன.

மேற்படி மோதல் சம்பவத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ள கிரிபத்கொடை பொலிஸார், பல்கலைக்கழக விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் நாளை காலை 8 மணிக்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

குறித்த பல்கலைகழகத்தின் விஞ்ஞானம் மற்றும் கலைப்பிரிவைச் சேர்ந்த 8 மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பொன்று மோதலாக மாறியதை அடுத்து அப்பகுதியில் இன்று காலை பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் காயமடைந்த சில மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவத்தை அடுத்து அவ்விடத்துக்கு விரைந்த பொலிஸார் மோதலை கட்டுப்பட்டுக்குள்  கொண்டுவந்துள்ளதுடன் மாணவர்களையும் கலைத்துள்ளனர்.  Comments - 0

  • Jezeer Thursday, 20 May 2010 02:20 PM

    வெள்ளத்தினால் மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி கஷ்டப்படுகிறார்கள், இந்த ஜோக்கர்ஸ் பைத்தியக்காரத்தனமா அடித்துகொள்கிறார்கள். இலவச பாடத்தின் அருமை தெரியாத ஜென்மங்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X