Editorial / 2020 ஓகஸ்ட் 08 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்சலாம் யாசீம்)
வயலுக்கு சென்ற நபரொருவர் குளவிக் கொட்டுக்கு இலக்கான நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (08) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு குளவிக் கொட்டுக்கு இலக்கான நபர் கோமரங்கடவல - கல்யாணபுர பகுதியைச் சேர்ந்த டி. நிலவீர (48வயது) எனவும் தெரியவருகின்றது.
வழமைபோன்று வயலுக்குச் சென்று வருகின்ற வீதியால் இன்று வருகை தந்து கொண்டிருந்த போது ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளவிகள் கொட்டியதாகவும் பின்னர் அயலவர்கள் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
இதனையடுத்து மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்
29 minute ago
34 minute ago
40 minute ago
45 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
34 minute ago
40 minute ago
45 minute ago