2020 ஓகஸ்ட் 14, வெள்ளிக்கிழமை

கொழும்பை சேர்ந்தவர் யாழ். குளத்தில் இருந்து சடலமாக மீட்பு

Editorial   / 2019 டிசெம்பர் 08 , பி.ப. 12:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

-டி.விஜித்தா, என்.ராஜ்

யாழ்ப்பாணம் புங்கன்குளம் வண்ணான் குளத்தில்  இருந்து ஆண் ஒருவரின் சடலம் இன்று (08) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் கொழும்பு  பகுதியை சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

குடும்பத்தவர்கள் கைவிட்ட நிலையில் யாழ்ப்பாணத்துக்கு வந்த குறித்த நபர் அங்கு தெரிந்தவர் ஒருவரின் வீட்டில் தங்கி இருந்துள்ளார்.

இந்த நிலையில், குளத்தில் சடலம் ஒன்று காணப்படுவது தொடர்பில் பிரதேச மக்கள் யாழ்ப்பாணம்  பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

அதனையடுத்து, அங்க சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைத்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--