Editorial / 2019 செப்டெம்பர் 04 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
காணாமல் போனவர்கள் தொடர்பான சான்றிதழை பெற்றுக்கொண்டுள்ள பயனாளிகளுக்காக மாதாந்தம் 6 ஆயிரம் ரூபாய் இடைக்கால நிவாரணத்தை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அத்துடன், இதற்கான அனுமதி, நேற்று (03) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போது வழங்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி முதல் ஒவ்வொரு மாதமும் 10ஆம் திகதி, பயனாளிகளின் வங்கிக்கணக்கில் நேரடியாக இந்த இழப்பீட்டு பணத்தை வைப்பீடு செய்யப்படவுள்ளது.
இதேவேளை, காணாமல் போன நபர்கள் தொடர்பான அலுவலகத்தின் இடைக்கால அறிக்கையை கவனத்தில் கொண்டு, அழுத்தத்துக்கு உள்ளான குடும்பங்களினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விண்ணப்பங்களுக்காக காணாமல் போனோர் தொடர்பான சான்றிதழை பெற்றுக்கொடுப்பதற்கும் அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
இது தொடர்பான உத்தரவை பதிவாளரின் திணைக்களத்திற்கு பிறப்பிப்பது தொடர்பில், நிதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சு ஆகியவை கூட்டாக சமர்ப்பித்த பரிந்துரைக்கு அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .