2026 மார்ச் 03, செவ்வாய்க்கிழமை

காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வியாழக்கிழமையன்று ஜனாதிபதியைச் சந்திப்பர்

எஸ்.என். நிபோஜன்   / 2017 நவம்பர் 15 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, வியாழக்கிழமையன்று தாம் சந்திக்கவுள்ளனரென, காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். “குறித்த சந்திப்பில், எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த 31 பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர் என, கிளிநாச்சி மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கச் செயலாளர் எஸ். நாதன் தெரிவித்தார்.   

“கிளிநொச்சிக்கு, கடந்த மாதம் விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதியிடம் தனியாகச் சந்திப்பதற்கு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளால் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. குறித்த சந்திப்பின்போது பொருத்தமான திகதியை அறிவிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டிருந்தார்” என்றும் அவர் தெரிவித்தார்.  

“அதன்பிரகாரம், ஜனாதிபதியுடனான சந்திப்பை, ஜனாதிபதி செயலகம், எதிர்வரும் வியாழக்கிழமை ஏற்பாடு செய்துள்ளது. அந்த ஏற்பாடானது, வரவேற்கத்தக்கது” எனவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம் தெரிவித்தது.   

“எம்மை அழைத்திருக்கின்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தம்முடைய பிரச்சினைக்கு, நல்லதொரு பதிலைத் தருவார் என்று, எதிர்பார்த்துள்ளோம்” என்றும் சங்கம் தெரிவித்தது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .