2020 ஒக்டோபர் 24, சனிக்கிழமை

குருணாகலில் கொள்ளையில் ஈடுபட்ட இராணுவ வீரர்கள் இருவர் கைது

Super User   / 2010 ஜூன் 20 , மு.ப. 08:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

குருணாகல் பிரதேசத்தில் இளநீர் விற்பனையில் ஈடுபட்டிருந்த பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியை அறுத்துச் சென்ற இராணுவத்தினர் இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குருணாகல் இராணுவ முகாமைச் சேர்ந்த கோப்ரல் மற்றும் லான்ஸ் கோப்ரல் பதவிநிலை வகிக்கும் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களாவர். இவர்களில் லான்ஸ் கோப்ரல் பதவிநிலை வகிக்கும் இராணுவ வீரர் அங்கவீனமுற்றவராவார்.

இவ்விருவரும் கொள்ளையில் ஈடுபட்டிருந்த போது இராணுவ சீருடையில் காணப்படவில்லை என்றும் மோட்டார் சைக்கிளொன்றில் சென்றே குறித்த பெண்ணின் தங்கச் சங்கிலியினை அறுத்துச் சென்றுள்ளனர் என்றும் பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

இவர்களில் ஒருவர் குணாகல் முகாமில் தங்கியிருந்த போதும், மற்றையவர் அவரது வீட்டிலிருந்த போதுமே கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் அவர்களால் கொள்ளையிடப்பட்ட தங்கச் சங்கிலியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--