2021 மார்ச் 03, புதன்கிழமை

’குறை கூறி பலனில்லை’

Niroshini   / 2021 ஜனவரி 21 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

குண்டூசியேனும் தயாரிக்காத நாடு என்று இனியும் நம்மை நாமே குறை கூறிக் பலனில்லையென்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

பன்னிபிட்டிய, மாகும்புர பிரதேசத்தில் நிறுவப்பட்ட யோ பிரேண்ட் பாதணி தொழிற்சாலையை நேற்று (20) திறந்துவைத்து உரையாற்றும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், இத்தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பாடசாலை பாதணிகள் சந்தை விலையின் 30 சதவீதம் குறைவாக சதொச விற்பனை நிலையங்களில் பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு கிட்டும் என்றார்.

எதிர்க்கட்சியின் சிலர் கொரோனா வைரஸ் பிரச்சினையில் தொங்கிக் கொண்டு அதிலேனும், மீளெழுவதற்கு முயற்சித்து வருகின்றனர் எனத் தெரிவித்த அவர், எங்களுக்கு வைரஸின் மூலம் அரசியல் செய்வதற்கான தேவையில்லை எனவும் கூறினார்.

நாட்டின் பாதுகாப்பாக இருப்பினும், தொற்று நெருக்கடியாக இருக்கட்டும், எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் என்ற ரீதியில் நாம் நமது கடமையை நிறைவேற்றுவோம். அதேபோன்று நாம் அந்த நம்பிக்கையை எப்போதும் காப்பாற்றியுள்ளோம் என்றார்.

'பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்தேனும் உள்ளுர் தொழில்முனைவோரை முன்னேற்றுவதற்கு நமக்கு முடிந்துள்ளது எனவும், பிரதமர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .