2026 ஜனவரி 28, புதன்கிழமை

கூட்டமாக சென்றதால் சிக்கல்

Editorial   / 2020 ஏப்ரல் 20 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

போக்குவரத்து அமைச்சு, சுகாதார அதிகாரிகளால் வழங்கப்பட்ட சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்காமல், இன்று (20), பஸ் சேவைகளில் ஈடுபட்ட அனைத்து பஸ் சாரதிகள், நடத்துநர்கள் பற்றிய தகவல்களைத் திட்டுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

மின்சாரம், எரிசக்தி மற்றும் பயணிகள் போக்குவரத்து மேலாண்மை அமைச்சர் மஹிந்த அமரவீரவால் அமைச்சின் செயலாளர் காமினி செனவிரத்னவுக்கு, இது குறித்து தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

போக்குவரத்து அமைச்சு, சுகாதார அமைச்சு ஆகியவற்றால் வழங்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்றாது, அளவுக்கதிகமான பிரயாணிகளை தனியார் பஸ்களில் ஏற்றிச் சென்றதாக, தனக்கு முறைப்பாடு கிடைத்துள்ளதாகவும் இது குறித்து புகைப்படங்கள், காணொளிகள் தனக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.

இவ்வாறு நடந்துகொண்ட பஸ்களை இனங்காணப்பட்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர், குறித்த பஸ்களின் வீதி போக்குவரத்துக்கான அனுமதி ரத்து செய்யப்படவுள்ளதாகவும் அதற்கு முன்னர், அறிவுரைகளைப் பின்பற்றாமல் சேவையில் ஈடுபடும் பஸ் நடத்துநர்கள், சாரதிகளை கைது செய்வதற்கு, பொலிஸார் உள்ளிட்ட இராணுவத்தினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X