2020 மே 25, திங்கட்கிழமை

கோதுமை மாவின் விலையை குறைக்காதிருக்க தீர்மானம்

Editorial   / 2019 செப்டெம்பர் 11 , பி.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிகரிக்கப்பட்ட கோதுமை மாவின் விலையை மீண்டும் குறைக்க முடியாது என, பிறீமா நிறுவனம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உலக சந்தையில் கோதுமை மாவின் விலை அதிகரிப்பு மற்றும் இறக்குமதி வரிகளைக் கருத்தில் கொண்டு இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, குறித்த நிறுவனம்  அறிவித்துள்ளதாக விநியோகஸ்தர்கள் கூறியுள்ளனர்.

புதிய விலைக்கு அமையவே, பிறீமா நிறுவனத்தால் கோதுமை மா விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 புதிய விலைக்கு அமைய, கோதுமை மா கிலோகிராம் ஒன்று 90 ரூபாய் முதல் 100 ரூபாய் வரையில் பல்வேறு விலை மட்டங்களில் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
 

X

X