Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2016 டிசெம்பர் 20 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கு அவர்களின் சேவைக்குரிய பிரதிபலனாக சம்பள அதிகரிப்பு தொடர்பான 'சம்பள மீளாய்வு வழிகாட்டி நூல்' வெளிவருவது இவர்களுக்குக் கிடைக்கின்ற வரப்பிரசாதமாகும் என்று, கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
இலங்கைமன்றக் கல்லூரியில் இன்று (20) நடைபெற்ற 'கூட்டுறவுத்துறை ஊழியர்களுக்கான வழிகாட்டி நூல்' வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மேலும் உரையாற்றிய அமைச்சர்,
நாட்டின் கூட்டுறவுத்துறை ஊழியர்கள் எமது அபிவிருத்திக்கு பெரும் பங்களிப்பை நல்கிவருகின்றனர். அவர்களின் பங்களிப்பையும் சேவையையும் அடையாளம்கண்டு அங்கிகரிக்க வேண்டிய தருணம் தற்போது ஏற்பட்டுள்ளது. கூட்டுறவு ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படுகின்றது என்ற நல்ல செய்தியை இந்தச் சந்தர்ப்பதில் தெரிவித்துக் கொள்கின்றேன். இந்த சம்பள மீளாய்வு நூலில் அவர்களின் ஊதிய அதிகரிப்புத் தொடர்பான விவரங்கள் அடங்கியுள்ளன.
2008ஆம் ஆண்டுக்குப் பின்னர் அதாவது 8 வருடங்களின் பின்னர் கூட்டுறவுத்துறைப் பணியாளர்களின் சம்பளம் முதன் முதலாக உயர்த்தப்படுகின்றன. இந்த நாட்டுக்கு பாரிய பங்களிப்பை நல்கிவரும் கூட்டுறவுத்துறை சார்ந்தோர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிக்கின்றேன்' என்றார்.
இந்நிகழ்வில் கைத்தொழில் வர்த்தக அமைச்சின் செயலாளர் டி.எம்.கே. தென்னக்கோன், கூட்டுறவு அபிவிருத்தி ஆணையாளர், கூட்டுறவுப் பணியாளர் ஆணைக்குழுவின் தலைவர் திருமதி சந்திரபாலி உடுகம்பல உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago