2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

’சுகாதார வசதிகள் இன்றி பாடசாலைகள் ஆரம்பிப்பு’

R.Maheshwary   / 2020 நவம்பர் 23 , பி.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாடசாலை 3ஆம் தவணைக்கான கற்றல் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் எவ்வித சுகாதார வசதிகளும் இன்றி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பிரியந்த பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

எனவே இதற்கு உரிய தீர்வை வழங்காவிட்டால், அதிபர் மற்றும் ஆசிரியர்களை கடமைகளிலிருந்து விலக்கிக்கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகமான பாடசாலைகளில் சுகாதார நிலைமைகள் குறித்து ஆராய்ந்து பார்க்க ஒருவரும் இல்லை. பொது சுகாதார பரிசோதகர்களுக்கு பாடசாலைகளுக்குச் செல்வதற்கு நேரமில்லை. அவர்களுக்கான கடமைகள் அதிகரித்துள்ளன. எனவே, இந்த நிலமையின் கீழ், மாணவர்கள் பாரிய பாதிப்பை எதிர்நோக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .