Editorial / 2019 ஒக்டோபர் 31 , பி.ப. 05:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தனது தோ்தல் விஞ்ஞாபனத்தை கண்டியில் இன்று (31) வெளியிட்டார்.
இந்த விஞ்ஞாபனத்தில் வெளியிடப்பட்ட சிறப்பம்சங்கள்
போதைப்பொருள், ஊழல் மற்றும் மதத் தீவிரவாதம் என்பவற்றுக்கு எதிரான போர்.
பலமான தேசத்தை உருவாக்குதல்.
தேசத்தை பாதுகாக்க ஸ்மார்ட் பாதுகாப்பு மற்றும் நவீன ஆயுதப்படை, அறிவார்ந்த புலனாய்வு வலையமைப்பு உருவாக்கம்.
மக்கள் சக்தியை ஒருங்கிணைக்கும் மக்களுக்கான அரசியலமைப்பு.
நாடாளுமன்றில் 25% பெண்களுக்கான தேசிய பட்டியல் ஒதுக்கீடு.
இலங்கை முதன்மையாக வலுவான வெளிநாட்டுக் கொள்கை.
நவீன, பாகுபாடற்ற விரைவான நீதி அமைப்பு.
நீதியும் சுதந்திரமுமான ஊடகத்துறை.
பேரழிவுகளின் போதான இடர் குறைப்பு மற்றும் மேலாண்மை.
போட்டித்தன்மை மிகு பொருளாதாரம்.
மலிவான இணைய இணைப்பு மற்றும் எளிதான கொடுப்பனவு.
பொருந்தோட்டங்களை தரம் உயர்த்துதல்.
நீதியான சமூகத்தை கட்டியமைத்தல், நவீன யுகத்திற்கேற்ற நவீன கல்வி.
பயன்தரும் சுகாதார சேவை.
35 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் மருத்துவ பரிசோதனை.
அனைவருக்கும் உறையுள், 2025ல் சொந்த வீடு கொண்ட சமூகம்.
தேசிய ஒற்றுமை மற்றும் சமத்துவம்.
இனம், மதம், வர்க்கம், பாலினம் கருத்தில் கொள்ளப்படாமல் சட்டத்தின் கீழ் சமமாக நடத்தப்படுவார்கள்.
மும்மொழிக் கொள்கை.
நல்லிணக்கம், மீள்கட்டுமாணமும்.
நீண்டகால இடம்பெயர்வினால் பாதிக்கப்பட்டவர்களின் மீள்குடியேற்றம், வீடுகள் மற்றும் மறுசீரமைப்பு இன்ன பிற உதவிகள்.
வட, கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான அலுவலகத்தை முழுமையாக ஆதரித்தல்.
நீண்டகாலம் விசாரணை இன்றி தடுத்து வைக்கப்பட்டிருப்போருக்கு விடுதலை.
தனிநபர்கள், குழுக்கள், அரசியல் கட்சிகள், நிறுவனங்களின் வரலாற்று வகிபாகம், சிந்தனை போக்கு என்பவற்றை மாணவர்கள் புரிந்து கொள்ளும் பாடத்திட்ட சீரமைப்பு.
இலங்கையின் ஆன்மீகம்.
பெண்களுக்கு 52% சமவாய்ப்பு.
மாற்றுத்திறனாளிகளை அரவணைக்கும் ஆணைக்குழு நிறுவல்.
மாற்றுத்திறனாளிகளுக்கு 3% இட ஒதுக்கீடு.
மலையக மக்கள்.
அனைத்து தோட்ட தமிழ் குடும்பங்களுக்கும் 7 பேர்ச் காணி.
அனைவருக்கும் தங்குமிடம்.
ஹைலேன்ட் பல்கலைக்கழகம்
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
4 hours ago
4 hours ago