Editorial / 2019 நவம்பர் 04 , மு.ப. 10:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
குடும்ப தலையீடு இல்லாத ஜனநாயக ஆட்சியொன்றை கட்டியெழுப்பவுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பண்டாரகம பகுதியில் இடம்பெற்ற பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், “இன்று சுதந்திரமாக கூட்டங்களை நடத்த முடிகின்றது. மனதில் உள்ள கருத்துக்களை அச்சமின்றி முன்வைக்க முடிகின்றது. சற்று பின்னோக்கி பாருங்கள். இவ்வாறான ஒரு நிலையா அன்று காணப்பட்டது?.
ஒரு குடும்பத்திடம் ஆட்சி அதிகாரங்கள் குவிந்திருந்தன. அவ்வாறான ஒரு யுகத்துக்கு மீண்டும் திரும்புவதாக நாட்டின் எதிர்பார்ப்பு? நான் ஒன்று உறுதியாக இந்த இடத்தில் கூறுகின்றேன். எனது ஆட்சியில் பிரேமதாச குடும்பத்தின் எந்தவொருவருக்கும் அரசாங்கத்தில் பதவிகள் வழங்கப்படமாட்டாது என்று உறுதியளிக்கின்றேன்” என்றார்.
55 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago