2020 மார்ச் 30, திங்கட்கிழமை

சஜித் நிதி மோசடி; சீகிரியாவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

Editorial   / 2020 பெப்ரவரி 26 , பி.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஞ்சன குமார ஆரியதாச

மத்திய கலாசார நிதியத்தின் சீகிரியா திட்ட அலுவலகப் பணியாளர்கள் இன்று  (26) சீகிரியா பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2019ஆம் ஆண்டு குறித்த அலுவலகப் பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய முற்பணத்தை வழங்குமாறும் இந்தாண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து புதிய கொடுப்பனவு முறையை செயற்படுத்துமாறும் கோரியே இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

விடயத்துக்குப் பொறுப்பான முன்னாள் அமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாஸாவால் மத்திய கலாசார நிதியத்தின் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதால் இன்று நிதியத்தில் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளதென, ஆர்ப்பாட்டக்காரர்கள்  தெரிவித்தனர்.

எனவே பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலையீடு செய்து குறித்த நிதியைப் ​பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன்போது கருத்துத் தெரிவித்த ஐக்கிய பொது சேவை சங்கத்தின் செயலாளர் ஜீ.நிலந்த அஜித்,  சஜித் பிரேமதாஸ அமைச்சராகப் பதவி வகித்த போது மத்திய கலாசார நிதியத்தின் நிதி  ஜனாதிபதித் தேர்தலின் போது மோசடி செய்யப்பட்டுள்ளதென்றும் இதனால் புதிய கொடுப்பனவு முறைக்கு அமைய பணியாளர்களுக்கு கொடுப்பனவை வழங்க முடியாமல் இருப்பதாகவும் தெரிவித்தார்.

 

 

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .