2021 ஜனவரி 20, புதன்கிழமை

சட்டநடவடிக்கை எடுக்காத அதிகாரிக்கு இடமாற்றம்

R.Maheshwary   / 2020 நவம்பர் 25 , பி.ப. 04:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா வலயத்துக்கு பொறுப்பான சுற்றாடல் அதிகாரியொருவர், உடன் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றப்பட்டுள்ளார்.

சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீரவின் உத்தரவுக்கமைய, மத்திய சுற்றாடல் அதிகாரசபை இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

முத்துராஜவல சுற்றாடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தியமைக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமைத் தொடர்பில், இவ்வாறானதொரு இடமாற்றத்தை வழங்குமாறு, மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு ஆலோசனை வழங்கியதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

முத்துராஜவல ஈர நிலத்தை நிரப்புவதற்கு மண் ஏற்றிய வாகனமொன்றை தானே அவதானித்ததுடன், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய நபருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியும் குறித்த அதிகாரி எவ்வித நடவடிக்கையும் எடுக்க முன்வரவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .