2020 ஒக்டோபர் 27, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத கட்டிடங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மஷுர் மெளலானா

Super User   / 2010 ஜூன் 05 , மு.ப. 06:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகர சபை எல்லைக்குள் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டடங்களின் உரிமையாளர்களுக்கு ஏதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கல்முனை மாநகர மேயர் மஷுர் மெளலானா  சற்று முன் தமிழ்மிரர் இணையதளத்திற்கு தெரிவித்தார்.

இது சம்பந்தமாக கருத்துத் தெரிவித்த அவர் மாநகர சபையின் அனுமதி இல்லாமல் கட்டப்பட்டுள்ள அனைத்து கட்டிட உரிமையாளர்களுக்கும் எதிர்வரும் 10ஆம் திகதி அறிவித்ததல் அனுப்பவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், மாநகர எல்லைக்குள் காணப்படும் கட்டாக்காலி மாடுகள், நாய்கள் என்பவற்றை பிடித்து அதன் உரிமையளர்களிக்கு தண்டப்பணம் விதிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
 
தற்போது, இந்த கட்டாக்காலி மாடுகள், நாய்கள் போன்றவற்றால் பாதசாரிகள் மிகவும் கஷ்டப்படுவதாகவும்  இது  சம்பந்தாமாக பல முறைப்பாடுகள் தனக்கு கிடைத்துள்ளதாகவும் இதற்கு மிக விரைவில் தீர்வு காணப்படும் என்று கல்முனை மாநகர முதல்வர் மஷுர் மெளலானா தமிழ்மிரர் இணையதளத்திற்கு குறிப்பிட்டார்.(R.A)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--