2026 ஜனவரி 16, வெள்ளிக்கிழமை

சாணக்கியனுக்கு நம்பிக்கையை சபையில் ஊட்டினார் டக்ளஸ்

Editorial   / 2020 டிசெம்பர் 10 , மு.ப. 04:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேள்விகளுக்கான பதிலோடு செயற்பாடுகளும் இருக்க வேண்டும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கேட்டுக்கொண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், ரஜினிகாந் கூறுவதைப்போல, சொல்வதைதான் செய்வேன், செய்வதைதான் சொல்வேன் என்கின்றீர்கள். அப்படி நடந்தால் மகிழ்ச்சி என்றார்.

அதற்கு பதிலளித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, “மக்கள் நலம் சார்ந்த கோரிக்கைக்கு நம்பிக்கையோடு இருங்கள்” என சாணக்கினுக்கு உறுதியளித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (09) இடம்பெற்ற வாய்மொழி மூலமான கேள்வி நேரத்தின் போதே இவ்விருவருக்கும் இடையில் சுவாரஸ்யமான சம்பாஷாணை இடம்பெற்றது.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நீங்கள் அனைத்து விடயங்களையும் செய்ய முடியும் என கூறுகின்றீர்கள். ஆனால் உங்களுடைய வரவு- செலவுத்திட்டத்தில் அமைச்சுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியினை முழுமையாக பயன்படுத்தினாலும் கூட இந்த அனைத்து விடங்களுக்கும் செய்யும் அளவிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்காது” என சாணக்கியன் குறிப்பிட்டார்.

அதேபோன்று பால்சேனை என்ற பிரதேசத்தில் வாகரையில் அந்த இடத்திலும் கூட ஒரு மீனவத்துறை முகத்திற்கான சில முன்னேற்பாடுகள் நடந்துள்ளன. அது தொடர்பாகவும் நாங்கள் ஏதாவது ஒரு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏன் என்றால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 130 கிலோ மீற்றர் கரையோரப்பிரதேசம் உள்ளதென சுட்டிக்காட்டிய சாணக்கியன் எம்.பி, கிழக்கில், கடற்றொழில் ஈடுபடும் மீனவர்கள், ரோலர் படகுகள் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்வைத்த அவர், இதற்கெல்லாம், உங்களுடைய அமைச்சின் ஊடாக இந்த வருடத்திற்குள் நிதி ஒதுக்கீடு செய்ய கூடிய வழிமுறைகள் உள்ளனவா? இது நடைபெறக்கூடிய சாத்தியக்கூறு உள்ளதா? எனக் கேட்டார்.

இதற்கு பதில் வழங்கிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா “நான் செய்வதை சொல்பவன், சொல்வதை செய்பவன்” என பதிலளித்தார்.
அதற்கு பதிலளித்த சாணக்கியன் எம்.பி, “நீங்கள் ரஜிகாந்தினை போன்று நான் செய்வதை சொல்வேன், சொல்வதை செய்வேன் என கூறியுள்ளீர்கள். அப்படி நடந்தால் மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டார்.      

 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X