2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

’சுமந்திரன் கூறுவது இது முதல் தடவை அல்லவே’

Editorial   / 2020 மே 13 , மு.ப. 05:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிமீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துகளை, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் வெளிப்படுத்துவது, இது முதல் தடவை அல்லவென்று, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்று (12) வெளியிட்டுள்ள அறிக்கையில், “2010ஆம் ஆண்டு தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்ற எம்.ஏ.சுமந்திரன், அந்த காலகட்டத்திலேயே ஓர் ஆங்கில ஊடகமொன்றுக்கு, 'வேலைவெட்டியில்லாத இளைஞர்கள் தான் ஆயுதபோராட்டத்தை ஆரம்பித்தார்கள்' என்றும் 'இராணுவத்தினரைவிட அதிகளவு பொதுமக்களை, புலிகள் தான் கொன்றார்கள்' என்றும் கூறி அன்றைய அரசாங்கத்துக்கு எதிராக எத்தனை விசாரணைகள் வந்தாலும் அதற்கு முகங்கொடுத்து சாட்சியாகத் தான் நிற்பதாகச் சொல்லாமல் சொல்லியிருந்தார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலை விடயத்தில் சுமந்திரனின் கூற்று அரசாங்கத்துக்குச் சார்பாகவும் அரசியல் கைதிகளுக்கு எதிராகவும் இருந்தது என்பதைத் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு அன்று தெரியாதா? இதனை நான் ஒருவன் தான் அன்று கண்டித்தேன் ஏனையவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

காலத்துக்கு காலம் தமிழ் மக்களை ஏமாற்றுவதற்காக கூட்டமைப்பு அரங்கேற்றிய நாடகங்களே இவை. தேர்தல் காலமானதால், இவ்வாறான நாடகங்கள் இனி அடிக்கடி அரங்கேறும். இனியும் தமிழ் மக்கள் ஏமாறாமல் இருந்தால் சரி” என்று, ஆனந்தசங்கரி மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X