2026 ஜனவரி 05, திங்கட்கிழமை

‘சம்பிக்கவை வெளியேற்றவும்’

Yuganthini   / 2017 ஜூன் 26 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்
“இனங்களுக்கிடையிலான ஐக்கியத்தைச் சீர்குலைக்கும் இனவாத அமைப்புகளின் ஆதாரமற்ற கருத்துகளுக்குத் துணைபோகும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க போன்றவர்களுக்கு, அரசாங்கம் கடுந்தொனியில் எச்சரிக்கை விடுத்து வெளியேற்ற வேண்டும்” என, கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தெரிவித்தார்.

தற்போதைய நாட்டு நிலைமை தொடர்பில், நேற்று (25) அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

‘முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியின் போதும், பொது பல சேனா அமைப்புக்கு மிகப்பெரும் பலமாக இருந்தவர் சம்பிக்க ரணவக்க என்பதை நாடே அறியும். மஹிந்தவின் ஆட்சி வீழ்வதற்கு, அதுவும் ஒரு காரணம் என்பதை தற்போதைய நல்லாட்சியின் ஜனாதிபதியும் பிரதமரும் கவனத்திற்கொள்ள வேண்டும்.

“ஞானசார தேரரின் இன்றைய செயற்பாடுகளுக்கு அமைச்சர் ரணவக்கவே முழுப்பொறுப்பையும் ஏற்கவேண்டும் என, கடந்த ஜூன் மாதம் 16ஆம் திகதி நடத்தப்பட்ட ஊடகச் சந்திப்பின் போது, அந்த அமைப்பின் தலைவர் டிலந்த விதானகே பகிரங்கமாக அறிவித்திருந்தார்.

“முஸ்லிம்கள், எப்போதும் சமாதானத்தையும் அமைதியையும் பேணி எல்லோருடனும் இணைந்து வாழவே விரும்புபவர்கள்.

தமது குறுகிய அரசியல் இலாபங்களை நிறைவேற்றிக்கொள்ள பாரிய திட்டமிடல்களுடன் இனவாதத்தை தூண்டி, அதனூடாக குளிர்காய்பவர்கள், இந்த நல்லாட்சி அரசாங்கத்துக்கு மிகவும் ஆபத்தானவர்கள் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .