Freelancer / 2026 பெப்ரவரி 24 , பி.ப. 09:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
அக்குரேகொடவில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடி ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் தற்போது 80 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.
இந்த இரட்டைக்கொலை சம்பவம் தொடர்பில், மூன்று நாட்களுக்குள் பிரதான துப்பாக்கிதாரி உட்பட ஐவர் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களில் மூவர் 90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், ஏனைய சந்தேகநபர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும் சில சந்தேகநபர்களைக் கைது செய்வதற்காக 12 பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன், வரும் நாட்களில் மேலதிக முன்னேற்றங்களை எதிர்பார்க்க முடியும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். R
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago